| |
|
| | Post New Topic | | Views: 89 | | Nov 02, 2009 8:04 pm | | | # | charu hasan | | ஒரு மகளுக்குக் கடிதம்
அன்பு நந்தினி, நாம் எல்லோரும் அவரவர் சாதனைகள் பற்றியே பேசி பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நம் தவறுகள் நாம் சிறுமை அடைந்த்,வெட்கப்படக்கூடிய, நிகழ்ச்சிகள் பற்றி சொல்லவோ அந்த நாட்கள் பற்றி நினைக்கிறோமா? சரித்திர உண்மைகளை அரசியல்வாதிகள் மறைப்பதும் நம் மக்கள் அவைகளை மறப்பதும் போல் நாமும் வேறுபக்கம் பார்த்துகொண்டே கடந்துசெல்ல முயல்கிறோம். உன் தந்தைபோல் என் தந்தை ஒரு சாதாரணனாக இல்லாமல் ஜில்லா போர்டு உப தலைவராகவும் அந்த பழய இராமனாதபுரம் மாவட்டதின் கல்விக்கூடங்களின் நிர்வாகப்ப்ருப்பிலும் இருந்ததால் என்னுடைய ஒன்பதாம் வயதில் ஆனா ஆவன்னா அல்லது ஏ பி ஸி டி தெரியாத மூன்று வேளை சோறு மட்டில தின்று வளர்ந்த பூனைக்கண் குட்டையன் என்ற பட்டப் பெயருடன், ராஜா சேதுபதி போர்டு ஹைஸ்கூலில் ஐந்தாம் வகுப்பில் மேள தாளத்துடன் அழைத்துசென்று இருத்தப்பட்டேன்.
ஒரு மாதம்வரை நான் என் வகுப்பு ஆசிரியர் சிதம்பரசுப்பு சொன்னது எதையும் புரிந்துகொள்ளவில்லை. நான் சொல்வதை அந்த சிதம்பர சுப்பு அன்றுமட்டும் இல்லை என்றுமே புரிந்துகொண்டதில்லை. அடிக்கடி என்னை அவர் மேஜைக்கருகில் வரச்சொல்லி என் காதைப் பிடித்து நான் வலியில் அலறும்வரை திருகுவார். பிறகு "ராமா ஒரு டம்ளர் தண்ணி கொண்டா!" என்று பள்ளியில் ஆரம்பத்தையும் முடிவையும் காட்டும் சத்தத்தை உற்பத்தி செய்யும் தோசைக்கல்லில் சுத்தியலால் தாளம் போடும் பியூனை அதைவிட பெரிய சத்ததம்போட்டு அழைப்பார்
அவனைத் தண்ணிர் ஊற்றச்சொல்லி கையைக் கழுவிக் கொண்டே "ஏண்டா டி.எஸ் மகனே குளிக்கிறதே இல்லையா? ஒரே அழுக்கு" என்று கூறி என் மானத்தை வாங்குவார். எங்கள் காலத்தில் வாத்தியார்கள் அடிப்பார்களேஒழிய அதில் கோபம் இருக்காது. வாத்தியரிடம் அடி வாங்குவது எங்களுக்குப் பெருமை என்று கருதப்பட்ட காலம். ந்தையரும் "இவனுக்கு நல்லா அடிச்சு பாடம் சொல்லிக் கொடுங்க." என்று சொல்லி பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்பிவித்துவிட்டுப் போகும் காலம். பின்னால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் படம் `ரியர் விண்டோ' என்ற பின்புறத்து சாளரம் என்ற பொருள்கொண்ட திரைப்படத்தில் அந்த படத்தின் கதா நாயகனை மருத்துவப் பணிப்பெண் `காதின் பின்புறம் சரியாய் கழுவினாயா?' என்று கேட்கும் வசனம் புறிந்த பிறகுதான் காதின் பின் சோப்புத் தேய்க்க ஆரம்பித்தேன். சினிமாவினால் யாருக்கும் பாடம் புகல முடியாது என்பதை நான் இப்போதெல்லாம் ஒப்புக் கொள்வதில்லை. அதே சங்கர்சுப்பு வாத்தியார் பேரன் நான் நடிகனான பிறகு ஒரு வெற்றி இயக்குனராய் என்னை சந்த்தித்தார். இதை நான் சொன்னதும் என் காதை சிறிது நேரம் பார்த்துவிட்டு "வெளியே சொல்லாதீங்க சார்! சிரிக்கப் போறாங்க!" என்று சொல்லிவிட்டுப் போனார். இதில் எனெக்கென்ன வெட்கம்?
சங்கரசுப்பு வாத்தியார் முதல் மாதம் வகுப்புப் பரிட்சை வைத்தபோது கேள்வித்தாளை அப்படியே காப்பியடித்து விடைத்தாளாக வைத்து விட்டுவந்தேன். மற்றவர் எல்லாம் 9/10, 8/10, 7/10 என்று மதிப்பெண் பெற்றிருந்தபோது அவர் எனக்குமட்டும் 0/10 என்று போட்டுவிட்டு `உங்க அப்பாகிட்ட காமிடா!' ஜெராக்ஸ் மிஷின் கண்டுபிடிக்கபடுமுன்பே அதன் வேலையை செய்துகாண்பித்த பெருமகனை ரஸிக்கத் தெரியாத ஒரு மனிதனை நாம் என்ன செய்யமுடியும்? எனக்கு என் தாய் எப்போதோ அவ்ர் முன்னோர்கள் கணிதமேதை வழிவந்தவர்கள் என்று சொல்லியது நினவுக்கு வந்தது. அதனாலோ என்னவோ விடைத்தாளில் வெளிப்பக்கம் 0/10 என்றிருந்தது பூதாகாரமாகத் தெரிந்தது. கணிதமேதை ராமானுஜம் ஆவியாக என் பூதவுடலில் நுழைந்து `0' வுக்குமுன் ஒரு கோடு போட்டார். அது 10/10 ஆக மாறியது. அப்பா வேலைப்பளுவில் உள்பக்கம் பிரித்துப் பார்க்காமல் "வெரி குட்" என்று எழுத்க் கையெழுத்திட்டார். அதுவரை உதவிய கணித மேதை எங்கோ மறைந்துவிட அதை வாத்தியார் சங்கரசுப்பு பார்த்த்விட்டு என்னை பெஞ்சுமேல் நிற்கவைத்து "இவன் பிற்காலத்தில் கள்ள் நோட்டு அடிப்பான் அல்லது போர்ஜரிக்கு ஜெயிலுக்குப்போவான் என்று வாழ்த்தினார் மற்றவை அடுத்த மடலில்...! அன்புடன் சாரு. Private Reply to charu hasan | | Nov 02, 2009 9:13 pm | | re: | # | padmanabhan ramasubban | | charu,
There are many who started very poor in maths and later on went to score well in academics including mathematics.
I always believed logical thinking process is involved in every aspect in life and maths is just one of them.
Many a times you find persons with excellent aptitude in engineering skills but they very poor in solving text book maths.
Private Reply to padmanabhan ramasubban | | Nov 02, 2009 10:23 pm | | re: re: | # |  SOEB FATEHI | | even a proscribed translation will do . . . . unless you continue to live in fear Private Reply to SOEB FATEHI | | Nov 03, 2009 4:04 am | | re: re: re: | # | sujatha suresh | | Sushiji, Pls come to the rescue with your "GOlden TOuch!".... Private Reply to sujatha suresh | | Nov 03, 2009 10:27 am | | re: re: re: re: | # |  SOEB FATEHI | | olden? ouch! Private Reply to SOEB FATEHI | | Nov 04, 2009 8:52 am | | re: re: re: re: re: | # |  Only God Will Judge Me! Secret Guy! S.V.N | |
 Private Reply to Only God Will Judge Me! Secret Guy! S.V.N | | Nov 04, 2009 10:05 pm | | re: re: re: re: re: re: | # | sujatha suresh | | nenachen..... after I posted I also saw, G'Olden' and T'Ouch'...and said to meslef OMG!...but then I was sure Sushi-the Japanese dish would not mistake....
and I was wondering, in cnk who will pick on this un-intentional slip... rather 'plis'... and "enna menna maynna moed" as to who will bring this up.... of course none other than SF....
and was sure svn will give a illustration of something perceived by self, and which can trigger more "Reactions" in the melee..... maybe, am adding a little fuel to the fire by writing the para below.... God save my friendship with Sushi the Lovely Lady!
[If BG was writing actively he might have tho' now a days his interest is seen more towards kids born out of momentary interest...Hahaha]
SS Private Reply to sujatha suresh |  | |
| |