| |
|
| | Post New Topic | | Tamil | Views: 69 | | Nov 06, 2009 1:03 am | | Tamil | # | charu hasan | | இயற்கை தராசு.
நேற்று இரவு இருந்த கொசுக்கடியில் காலையில் என் வெள்ளை கைலி முதல் போர்வை தலயணை வரை இரத்தக் கரையாக இருந்தது.நான் சினிமா பாஷையில் மட்டில் ஒப்புக்கொள்ளப் பட்ட, என்னுடைய "நீ பாதியிடம்" காண்பித்தேன். அவர் "பாவம் கொசுக்களுக்கு எவ்வளவு பற்கள் வலித்திருக்கும்?' என்றார். `எத்தனை கோணங்கள் எத்தனை பார்வைகள்' என்று, நான் 27 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் திரைக் கதையில், நான் கதாநாயகனாக நடித்து, வெளியிடப் படாமல் தகரப் பெட்டிகளில் இருந்து உளுத்துப்போன திரைப்படம் நினைவுக்கு வந்தது.
இந்த ecological balance என்ற திவிர பழமை சிந்தனையை மறக்காமல் பாடுபடுபவர்களில் என்னுடய "நீ பாதியும்" ஒருவர் என்று இன்று புரிந்துகொண்டேன். இப்போதெல்லாம் இந்த "நான் பாதி"களை, "நீ பாதி" கள் பொதுவாகவே மதிப்பதில்லை என்று கேள்விப்படுகிறேன். அந்தக் காலத்து "நான் பாதி"கள் `நீ பாதி' களை உடன் கட்டை ஏறச் செய்தும், மாதவிகளோடு ஓடிப்போன "நான் பாதி" களின் நற்பெயரைக் காக்க ஊரை எரிக்கும் யோசனையை தமிழ் காவியங்களில் கூறியும், வடமொழி இதிகாசங்களில் 'நான் பாதி' களை கூடையில் வைத்து "நீ பாதி" கள் வேசி மனைக்கு எடுத்துச்ெசெல்ல தார்மீகக் கட்டளைகள் பிறப்புவித்த பலன் இந்தக் காலத்து "நீ பாதி'கள் `நான்பாதி' களை அடித்துத் துவைத்து கொசுக்கடியில் படுக்க வைத்துப் பழி வாங்குகிறார்கள். இந்த இரு கண்கள் வெவேறு கோணங்களில் பார்ப்பதால் எதிர் எதிராக சதுரங்க மற்றங்கள் கூட ஏற்படலாம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழும் என் சோதரர்கள்கூட இந்த "நீ-பாதி-நான் பாதி" யின் வருங்காலத்தைப் பற்றி யோசிக்கலாம். எங்களைப் போன்றவர்கள் காலம் கடந்து விட்டோம் Private Reply to charu hasan | | Nov 06, 2009 9:25 am | | re: Tamil | # |  Only God Will Judge Me! Secret Guy! S.V.N | |  Private Reply to Only God Will Judge Me! Secret Guy! S.V.N | | Nov 06, 2009 11:38 am | | re: re: Tamil | # |  SOEB FATEHI | | translate please Private Reply to SOEB FATEHI |  | |
| |