Ryze - Business Networking Buy Ethereum and Bitcoin
Get started with Cryptocurrency investing
Home Invite Friends Networks Friends classifieds
Home

Apply for Membership

About Ryze


Chennai Network
Previous Topic | Next Topic | Topics
The Chennai Network Network is not currently active and cannot accept new posts
31 year old film reviewViews: 772
Jun 23, 2010 5:35 am31 year old film review#

charu hasan


உதிரிப்பூக்கள்... ஒரு எதிர்மறை பார்வை



முப்பது ஆண்டுகளுக்கு முன் சினிமா என்பது என்ன? அதை எந்த எந்தக்கோணங்களில் திரும்பப் பார்க்கலாம்
திருப்பியும் பார்கலாம் என்று, இயக்குனர் மஹேந்திரன் என்ற ஒரு அறிவு ஜீவி எனக்கு தந்த வாய்ப்பை பயன்படுத்தி, அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்தபடம் வெற்றியடைந்து என் எதிர்காலத்தை இந்த அளவுக்கு மாற்றும் என்றும் கமல் என்ற ஒரு பிறவி நடிகன் பின்னால் எங்களைப் போன்ற குட்டி நடிகர்களும் பிற்காலத்தை சிறக்கச் செய்யும் இயக்குனர்களும் தோன்றுவார்கள் என்று அன்று நினைக்கவில்லை.

1979ல் வெளியான இந்தப்படத்தின் கதையை படத்தை பார்க்கும் வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கும், பார்த்தும் காலப்போக்கில் மறந்துவிட்ட என் வயது நண்பர்களுக்கும், மஹேந்திரன் சொல்வன்மையினால் 'மெய்யாகுமே மெய்யாகுமே என்று
தன்னைத்தானே திரைஅமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு, சாராசரி சிந்தனைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு
`யதார்த்தம்' என்ற பட்டமளித்து சமூக நியதிகளை ஓரம்கட்டிவிட்டு, மஹேந்திரனின் திறமைக்கு அடிமைகளாகிவிட்ட திரைப்பட விமர்சகர்களுக்கும் தெரிவதற்காக மறுபடி இயக்குனரின் திறமையை களைந்து எடுத்துவிட்டு என் மொழியில் உங்களில் சிலருக்கு புரியும் வழியில் கதையை ம்றுபடி கூறுகிறேன்.

கதா நாயகன் விஜயன் (நடிகர் பெயர்தான் நினைவிலிருக்கிறது) ஒரு கிராமப் பள்ளியின் போஷகரும் மேலாள்ரும்
தலைமை அசிரியராகவும் தோன்றி புதிதாக வரும் இளம் ஆசிரியர் சுந்தரை பூப்போட்ட சட்டையுடன் வருவதற்காக " இங்கு என்ன சினிமாவா நட்த்துகிறோம்!" என்று கண்டிக்கிறார்.

அடுத்தகாட்சியில் சுந்தர் சட்டையின்றி பனியனுடன் சிறுவர்களுக்கு பாடம் நடத்துவதை 'என்னய்யா இது பனியன்?'
என்று விஜயன் கேட்க சுந்தர் "நீங்கதானே பூப்போட்ட சினிமாக்காரச் சட்டை வேண்டமென்றீர்கள்? என்னிடம் ஜிப்பா எதுவும் இல்லை." என, விஜயன் "அதற்காக இப்படியா?" என்று அலுத்துக்கொண்டு போகிறார்.

மக்களுக்கு விஜயனின் வில்லத்தனத்தை விளங்க வைக்க இயக்குனர் ஆசிரியர் தொழில்கூடம் நடத்தி வெள்ளைக்காரன்
காலத்து உடைக் கொடுமை இன்றும் நடக்கிறது என்று ஜிப்பாவைக் கேலி செய்து ஒரு காட்சி அமைப்புச் செய்து விஜயனை வில்லனாகவும் சுந்தரை அடிமையாகவும் நம்பவைக்கிறார் இயக்குனர்.

தம்புசாமி என்பது படத்தின் திரைக்கதையில் எனக்குக் கொடுக்கப்பட்ட பெயர். காட்சிகளில் எங்கும் அந்தப்பெயர் வந்ததாக நினவில்லை. தம்புசாமியின் மூத்தமகளை விஜயன் மணம் செய்து ஒரு ஆணும் பெண்ணும் குழந்தைகளாக, அடிக்கடி தோன்றி உங்களுக்கு மக்களையும் என்போன்ற வயோதிகருக்கு பேரன் பேத்திகளையும் நினவுறுத்துகிறார்கள்.

விஜயனின் இன்னோரு கொடுமை தன் மனைவியின் தங்கையுடன் ஆசிரியர் சுந்தர் கிராமத்து மொளைக்கொட்டு திண்ணையில் ஒரு சின்ன விளையாட்டு, அதை காதல் விளையாட்டு என்றும் சொல்லலாம் சின்னப் பிள்ளைகள் விளையட்டு என்றும் சொல்லலாம்.சுந்தரை
மர்ியாதையாக அழைத்துச் சென்று ஒரு டீ வங்கிக் கொடுத்து " அது என் மனைவியின் தங்கை என்பது தெரியுமா? இனிமேல் இந்த மாதிரி விளையாடாதே! மணி அடித்துவிட்டது. டீயை வைத்டுவிட்டு வகுப்பறைக்குப் போ!" என்கிறார்.


விஜயனின் தாய் சி.டி. ராஜகாந்தம் என்னை (தம்புசாமியை) அடிக்கடி சந்தித்து நான் கொடுக்கவேண்டிய கடன் பாக்கியை
கேட்டு கொடுமைப் படுத்துகிறார்.

கடன் தொல்லையும் சம்பந்தி அம்மாள் தொல்லையும் தாங்காமல் நான் ஊரைவிட்டு போகும் சிந்தனையில் இருக்கும் போது விஜயன் என் சின்னமகளையும் தனக்கே திருமணம் செய்தால் வியாதிக்கார அக்காளையும் குழந்தைகளையும் இரண்டாவது மகள் லட்சுமி கவனித்துக் கொள்வாள்... என்று ஒரு நல்ல(?) யோசனையை எனக்கு சொல்கிறார். வீருண்டு எழுந்து " நான் தந்தையாக இருக்கத்தான் ரும்புகிறேன் ........ புரோக்கராக அல்ல!' என்று வசனம் பேசிக் கைதட்டல் பெறுகிறேன்.

அந்த ஊருக்குப் புதிதாக வந்த மருத்துவர் சரத்பாபு விஜயன் மனைவியை காதலித்து தம்புசாமியிடம் பெண் கேட்டு வந்தவர்.
அவரிடம் கணவ்னுக்குத் தெரியாமல் அப்பா தம்புசாமிக்கு கொடுக்கக் கடன் வாங்குகிறாள். இதைக் கண்டுபிடித்த கணவன் ஊர் பஞ்சாயத்தை கூட்டுகிறான். ஊரில் உள்ள நல்லவர்கள் முன்னாள் காதலனிடம் கடன் வாஙக்ிய பெண்ணின் மானத்தைக் காக்க ஒரு கலகம் நடத்தி அந்தப் பஞ்சாயத்தைக் கைல்த்து விடுகிறார்கள்.

விஜயன் மனைவி இறந்துவிடுகிறாள். அவர் வேறு ஒரு பெண்ணை மணம் செய்துகொண்டு வருகிறார். சுந்தருக்கும் இரண்டாம் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகி நடக்கும் போகும் தருணம் மணப்பெண் யாரையும் கலந்து யோசிக்காமல் இரவில் விஜயன் வீட்டிற்குச்சென்று பிள்ளைகளை வளக்கும் தகுதி அவனுக்கு இல்லை என்றும் தன்னுடன் அனுப்பிவிடும்படி கேட்கிறாள். விஜயன் அவளை வேறு கெடுதலெதுவும்
செய்யாமல் மாஹாபாரத துச்சாசனன் முறையில் சேலையை உருவிகொண்டு விரட்டி விடுகிறான். அவன் மனைவி இதைக்கண்டு கோபம் கொண்டு கிராமப்புறத்து விவாக ரத்துப் போல் பிரிந்து செல்கிறாள்.

கற்பழிப்பவர்களைக் கூட மனித்துவிட்டு சேலையை உருவும்போது வேடிக்கை பார்துவிட்டு கதை முடிவில் மஹாபாரத யுத்தம் நாம் நடத்தியதுபோல் கிராமம் திரண்டு விஜயனை தற்கொலை செய்துகொள்ளக் கட்டளையிடுகிறது. தாயை ஏற்கெனவே இழந்த இரண்டு பிள்ளைகள்
நதிக்கரை ஒரம் பெற்றோரை தேடி அலைகின்றனர். சுபம்

கதையின் மையக்கருத்துக்கள் Moral of the story...........

1. பள்ளி ஆசிரியர்கள் சீருடை அணியவேண்டும் என்ற கொடுமை ஒழியட்டும். ஜீன்ஸ் அணிந்தும் வரலாம்.

2. இரண்டு மனைவிகள் வைத்துக் கொள்பவர்கள் அரசியல் தலைவராகவோ ஆட்டோ ஓட்டுனராகவோ அல்லது குறைந்த் பட்சம் ஒரு சினிமா கதா நாயகனாகவோ இருக்கவேண்டும். திரைப்பட இயக்குனராகவும் இருக்கலாம். ஒரு பள்ளி ஆசிரியர் அது பற்றி சிந்தித்தாலே அது குற்றம்.

3. மனைவி தன் பழய காதலனிடம் கடன் வாங்கினால் அதை (என்ன?) கனவுபோல் மறந்து விடுங்கள். வெளியே சொல்லவேண்டாம்.

4. ஒரு பெண்ணை நீங்கள் ஆடையை களையாமல் கற்பழித்தால் நாங்கள் மன்னிக்கலாமா என்று யோசிப்போம்.

Private Reply to charu hasan

Jun 25, 2010 9:12 amre: 31 year old film review#

padmanabhan ramasubban
Charu Anna,

IddHu Konjam hi funda "art paadam " poola irrukudu

Adudhan Neykuu theri leydu!

orey bouncer maadri thalikoo melay poi idu dhu

Private Reply to padmanabhan ramasubban

Jun 25, 2010 10:34 amre: re: 31 year old film review#

Ganesh Ram
I did not see that movie but I have heard it was good. Those were the days I have never seen may films and a very few tamil films. But I remember the huge poster over the India Cafe with the heroine looking towards the lake. I think the child artiste then became the heroine in "KeaLadi KaNmaNI'.

Private Reply to Ganesh Ram

Previous Topic | Next Topic | Topics

Back to Chennai Network





Ryze Admin - Support   |   About Ryze



© Ryze Limited. Ryze is a trademark of Ryze Limited.  Terms of Service, including the Privacy Policy